நாடாளுமன்ற தேர்தல்: “பாஜக தலைமையில் கூட்டணி”: அண்ணாமலை

அரசியல்

2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையில் தான் கூட்டணி என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாஜக, அதிமுக கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை இருவரும் தொடர்ந்து வார்த்தை மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசும்போது, “அகில இந்திய தலைவர்கள் நன்றாக யோசனை செய்துவிட்டு தான் கூட்டணி குறித்து முடிவெடுக்கிறார்கள். மாநில தலைவராக என்னுடைய கருத்தை அமித்ஷாவிடம் கூறியிருக்கிறேன். அவர் அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கிறது என்று கூறினாரே தவிர கூட்டணியை உறுதி செய்யவில்லை. தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் இருக்கும் போது கூட்டணி குறித்து முதலுரையும் முடிவுரையும் எழுத முடியாது. முடிந்தால் தான் கூட்டணி கட்சி உறுதியாகி விட்டது என்று கூற முடியும்” என்று பேசியிருந்தார்.

அவரது கருத்துக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, “மத்தியில் பாஜக ஆளுகின்ற கட்சி. கூட்டணியை பொறுத்தவரையில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் தான் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். மாநிலத்தில் இருக்கிறவர்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. மத்தியில் இருக்கிறவர்கள் கூட்டணி தொடரும் என்று சொல்லியிருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

இந்தநிலையில் அதிமுக பாஜக கூட்டணி குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, “கட்சி வளர்ச்சி என்பது தான் நம்முடைய அடிப்படை கொள்கை. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து டெல்லியில் உள்ள தலைவர்கள் தான் இறுதியான முடிவு எடுப்பார்கள். அந்த முடிவிற்கு மாநில தலைமை கட்டுப்படும். பாஜக, அதிமுக கூட்டணியில் தான் இருக்கிறோம். இதை தான் நானும் அமித்ஷாவும் சொல்கிறோம்.

நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை தொகுதி பங்கீடு, கொள்கை ஆகியவற்றை பார்த்து தான் டெல்லி தலைமை முடிவு எடுப்பார்கள். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் மாநில அளவில் நடைபெற்றதால் அதிமுக தலைமையில் தேர்தலை சந்தித்தோம். 2024-ஆம் ஆண்டு பிரதமரை தேர்வு செய்கிற நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜக தலைமையில் தான் கூட்டணி. தமிழ்நாட்டில் இருப்பவை எல்லாம் பிராந்திய கட்சிகள் தான்.

மாற்றான் தாய் மனப்பான்மை இல்லாமல் பரஸ்பரம் விட்டுகொடுத்து முடிவெடுப்பது தான் வலிமையான கூட்டணியை உருவாக்கும்” என்று தெரிவித்தார்.

செல்வம்

‘ஆணவத்தின் உச்சம்’ : ஆளுநருக்கு வைகோ கண்டனம்!

“திருச்சியில் டைடல் பார்க்”: தங்கம் தென்னரசு அறிவிப்பு!

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *