திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டுள்ள பாஜக தலைவர் அண்ணாமலை, அடுத்தடுத்து வேறு கட்சிகளின் பட்டியலும் வெளியிடப்படும் என்று குறிப்பிட்டார்.
திமுகவின் சொத்து மதிப்பு ரூ.1.31 லட்சம் கோடி என்று பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை இன்று (ஏப்ரல் 14) வீடியோ வெளியிட்டார்.
பாஜக தலைமை அலுவலகத்தில் இதுகுறித்து பேசிய அண்ணாமலை, ஊழலை எதிர்த்து என் மண் என் மக்கள் என்ற பெயரில் பாத யாத்திரை நடத்த இருப்பதாக கூறினார்.
மோடி அரசு ஒரு இல்லம் ஒதுக்கினால் அது பயனாளர்களுக்கு சென்று சேர்வதற்குள் பலருக்கு லஞ்சம் கொடுக்கும் நிலைமை இருப்பதாக தெரிவித்த அண்ணாமலை, இன்று வெளியிட்ட வீடியோ பார்ட் ஒன்றுதான். இன்னும் மூன்று பார்ட் இருக்கிறது.
மக்களவைத் தேர்தலுக்குள் அடுத்தடுத்து வெளியிடப்படும். வெவ்வேறு கட்சிகளும் இதில் கொண்டு வரப்படும். தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அனைத்து கட்சியின் நிர்வாகிகள் சொத்தும் வெளியே வரும்” என குறிப்பிட்டார்.
தமிழகத்தில் திமுகவும், அதிமுகவும் மாறி மாறி ஆட்சி அமைத்து வரும் நிலையில் இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
பிரியா
திமுக அமைச்சர்களின் குடும்ப சொத்துப் பட்டியல் : அண்ணாமலை
ரஃபேல் வாட்ச் பில்லை காட்டிய அண்ணாமலை