”பிடிஆர் ஆடியோவை மறுத்து நீதிமன்றம் படியேற அவர்கள் தயாராக இருந்தால், அங்கே நாங்கள் பிடிஆரின் ஒரிஜினல் ஆடியோவை ஒப்படைக்க தயாராக இருக்கிறோம்.” என்று தெரிவித்தார்.
தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (ஏப்ரல் 30) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பிடிஆர் ஆடியோ விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அண்ணாமலை பதிலளித்து பேசுகையில், ”ஆடியோ விவகாரத்தில் பிடிஆர் மீது எந்த தவறுமில்லை. அவர் கொள்ளையடிக்கவில்லை. மாறாக அங்கு (திமுக) என்ன நடக்கிறது என்பதை மட்டுமே பேசியுள்ளார். இதன்மூலம் பிடிஆர் ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளார்.
இதனை மறுத்து நீதிமன்றம் படியேற அவர்கள் தயாராக இருந்தால், அங்கே நாங்கள் பிடிஆரின் ஒரிஜினல் ஆடியோவை ஒப்படைக்க தயாராக இருக்கிறோம்.
திமுக என்மீது எப்போது வேண்டுமானாலும் வழக்கு தொடரலாம். அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.
கிறிஸ்டோபர் ஜெமா
அண்ணாமலைக்கு கெடு: ஜெயக்குமார் ஆவேசம்!
100வது ‘மனதின் குரல்’: தமிழக பெண்களை நினைவுகூர்ந்த மோடி