பெட்ரோல் குண்டு வீச்சு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை பிரதிபலிக்கிறது: அண்ணாமலை

கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத்தை கைது செய்து காவல்துறை அவரிடம் விசாரணை நடத்தி வருகிறது.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் தமிழகத்தின் உண்மையான சட்டம் ஒழுங்கைப் பிரதிபலிக்கிறது. முக்கியமில்லாத விஷயங்களில் மக்களின் கவனத்தை திசை திருப்புவதில் திமுக மும்முரமாக இருக்கும்போது, ​​குற்றவாளிகள் தெருக்களில் இறங்கிவிட்டனர்.

2022-ஆம் ஆண்டு சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய அதே நபர் தான் கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு குண்டு வீசியுள்ளார்.

இந்த தொடர் தாக்குதல்களுக்கு திமுக அரசுதான் நிதியுதவி செய்கிறது என்று நினைக்கத் தோன்றுகிறது. எப்பொழுதும் போல இந்த விவகாரத்தை திசை திருப்ப முதல்வர் ஸ்டாலின் தயாராகிக்கொண்டிருப்பார்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

சூர்யா 43 அப்டேட்: ஜிவி பிரகாஷ் கொடுத்த குறியீடு!

அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையர் ஆலோசனை!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts