2022ல் தமிழ்நாடு எத்தனையோ அரசியல் களத்தைக் கடந்து வந்து தற்போது வாட்ச் அரசியலில் நிற்கிறது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்டியுள்ள ரபேல் வாட்ச் குறித்துத்தான் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இந்த வாட்ச்சின் விலை 5 லட்சம் ரூபாய் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில், “வெறும் 4 ஆட்டுக்குட்டி மட்டுமே சொத்தென சொல்லும் ஆட்டுப்புளுகர் பிரான்ஸ் நிறுவனம் சார்பில் உலகளவில் வெறும் 500 கை கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு 5 லட்சத்துக்கும் மேல் விலையுள்ள ரபேல் வாட்ச்சை கட்டியிருக்கிறார்.
இதற்கான பில்லை வெளியிட வேண்டும்” என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து சமூக வலைதளங்களிலும், அரசியல் கட்சியினர் மத்தியிலும் ரபேல் வாட்ச் பேசுபொருளானது.
ஆனால் இதுவரை அண்ணாமலை வாட்ச்சின் பில்லை வெளியிடவில்லை. எனினும் விரைவில் சம்பள கணக்கையும் வாட்ச் வாங்கிய பில்லையும் வெளியிடுவதாகவும் தன்னைவிட தனது மனைவி 7 மடங்கு அதிகம் சம்பாதிப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், “தம்பி மல பில் இன்னும் வரல” என்று அச்சிட்டு கரூரில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் இடம் பெற்றுள்ள வாட்சின் நடுவே வடிவேலு படமும் இடம்பெற்றுள்ளது.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருமாநிலையூர் பகுதியில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. திமுக ஆதரவாளரான திருமாநிலையூரைச் சேர்ந்த டி.எம்.செல்வேந்திரன் இந்த போஸ்டரை இன்று (டிசம்பர் 25) ஒட்டியுள்ளார்.
இதில், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரது படமும் இடம்பெற்றுள்ளது.
முன்னதாக கோவை லங்கா கார்னர், உப்பிலிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், டிக் டிக் டிக் பயந்துட்டியா மல என்ற வாசகத்துடன் வாட்ச் புகைப்படத்துடன் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்று போஸ்டர்கள் ஒட்டப்படுவது பாஜகவினரிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரியா
தாலிபான்களின் புது கண்டிஷன்: அமெரிக்கா கண்டனம்!
அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் சேர்த்துச் செயல்படுகிறோம்: உதயநிதி ஸ்டாலின்