சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையிலும் இரவு, பகலாக பணியாற்றி வரும் மாநகராட்சி ஊழியர்களுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தற்போது நாகப்பட்டினத்தின் பல்வேறு பகுதிகளில் ‘என் மண், என் மக்கள்’ நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
நேற்று இரவு வேதாரண்யத்தில் பிரசாரம் மேற்கொண்ட நிலையில், வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் டிசம்பர் 5 ஆம் தேதி வரை தனது நடைப்பயணத்தை ரத்து செய்வதாக இன்று அறிவித்தார்.
இந்த நிலையில் வேளாங்கண்ணி பேராலயத்தில் இன்று வழிபாடு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை பேசுகையில், “கனமழை மற்றும் புயல் காரணமாக டிசம்பர் 5 ஆம் தேதி வரை நடைப்பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 6 ஆம் தேதி கடலூரிலிருந்து நடைப்பயணத்தை துவங்க உள்ளேன்.
தற்போது பெய்து வரும் கனமழைக்கு நடுவிலும் சென்னை மாநகராட்சி கீழ்நிலை ஊழியர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை கடுமையாக உழைக்கின்றனர். இரவு நேரத்தில் மழையால் எங்கு தண்ணீர் தேங்கினாலும், மாநகராட்சி ஊழியர்கள் அங்கு சென்று சரி செய்கின்றனர்.
சிறிய மழைக்கு தண்ணீர் தேங்குவது இல்லை, கனமழைக்கு தேங்கும் தண்ணீர். சில மணி நேரத்தில் வடிய வைக்கப்படுகிறது. மாநகராட்சி ஊழியர்களின் பணி பாராட்டுக்குரியது.
திமுக ஆட்சிக்கு 30 மாத காலம் இருக்கிறது. அதற்குள் மழைநீர் தேங்கும் பிரச்சனையை முழுவதுமாக சரி செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் நான் அரசியல் செய்ய விரும்பவில்லை” என்று அண்ணாமலை தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
டி20 உலகக்கோப்பையில் முதன்முறையாக கால்பதித்த உகாண்டா!
இனி ‘லவ்வர்’ மணிகண்டன்… ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!