வெதர் ரிப்போர்ட்: நடைபயணத்தை ஒத்திவைத்த அண்ணாமலை

Published On:

| By Monisha

enn mann enn makkal yatra

டிசம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் ‘என் மண் என் மக்கள்’ நடைபயணத்தை ஒத்திவைப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். enn mann enn makkal

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னையிலும் நேற்று முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் அடுத்த 4 நாட்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி டிசம்பர் 3 ஆம் தேதி புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் டிசம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கனமழை காரணமாக ‘என் மண் என் மக்கள்’ நடைபயணம் ஒத்திவைக்கப்படுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அந்தமான் மற்றும் வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால், தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் அடுத்த சில தினங்களுக்கு வெகு கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால்,

பொதுமக்கள் மற்றும் தமிழ்நாடு பாஜகவின் சகோதர சகோதரிகளின் பாதுகாப்பு கருதி, என் மண் என் மக்கள் நடைபயணம், வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்படுகிறது.

டிசம்பர் 6 முதல், மீண்டும் நடைபயணம் தொடரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். பயண விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே உடல் நிலை மற்றும் மிலாது நபி உள்ளிட்ட காரணங்களுக்காக நடைபயணத்தை ஒத்திவைத்த அண்ணாமலை தற்போது கனமழை காரணமாக நடைபயணத்தை ஒத்திவைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

எக்ஸிட் போல் பலிக்குமா? 2018 சொல்லும் மெசேஜ்!

‘முடியல’ விஷ்ணுவின் சுயரூபத்தை தோலுரித்து காட்டிய ஹரிஷ் கல்யாண்

enn mann enn makkal

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment