டிஜிட்டல் திண்ணை: உள்ளே வெளியே உச்சத்தில் எதிர்ப்பு…கட்டம் கட்டும் டெல்லி… காரணங்களை செட் செய்யும் அண்ணாமலை

Published On:

| By Aara

வைஃபை ஆன் செய்ததும் அண்ணாமலையின் விரக்தி பேச்சு வீடியோக்கள் இன்பாக்சில் வந்து விழுந்தன.

“தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஜூலை 22 ஆம் தேதி கோவையில் நடந்த ஒரு நிகழ்வில், ‘மூன்று வருடங்களுக்கு முன் எஸ்.பி.யாக இருந்தபோது சரியா தவறா என உடனுக்குடன் முடிவெடுத்தேன். ஆனா கடந்த மூணு வருஷமா ரொம்ப கஷ்டமான நாற்காலியில உக்காந்திருக்கேன். அரசியலை விட்டுட்டுப் போயிடலாமானு கூட சலிப்பா இருக்கு’ என்று விரக்தியாக பேசினார் அண்ணாமலை.

இது நடந்த அடுத்த நாளான ஜூலை 23 ஆம் தேதி குமரியில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ‘நான் காம்ப்ரமைஸ் செய்யாம அரசியல்ல இருக்கணும்னு வந்தேன். ஆனா இங்க நேர்மையான அரசியல் நடக்கல. காம்ப்ரமைஸ் செய்ய வேண்டியிருக்கு. 2020 ஆகஸ்டுல நான் பிஜேபில சேர்ந்தப்ப எப்படி இருந்தேனோ அப்படி இருக்க ஆசைப்படுறேன். காம்ப்ரமைஸ் செய்யாம எத்தனை நாள் வண்டி ஓடுமோ ஓடட்டும்ணா’ என்று மீண்டும் அதே தொனியில்தான் பேசினார்.

2 பேர், புல்லாங்குழல் மற்றும் கோவில் படமாக இருக்கக்கூடும்

மேலும் ஜூலை 23 ஆம் தேதி குமரியில் ஆர்.எஸ்.எஸ். தேசிய தலைவர் மோகன் பகவத் தலைமையில் விவேகானந்தா கேந்திராவில் நடந்த நிகழ்வில் அண்ணாமலையோடு ஸ்மைல் கூட செய்யவில்லை மோகன் பகவத்.

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி படுதோல்வி அடைந்தது. 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்திருந்த நிலையில்… அண்ணாமலையின் அதிரடிப் பேச்சுகளால் அதிமுக பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டது. அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தால் திமுக எதிர்ப்பு வாக்குகளை ஒருமுகப்படுத்தலாம் என்று டெல்லி பாஜக தலைமைக்கு தமிழக பாஜக புள்ளிகள் சிலர் தகவல் அனுப்பியும்., மாநிலத் தலைவரான அண்ணாமலை தன் தலைமையில் தனி அணி அமைக்க வேண்டும் என்ற முனைப்பில் டெல்லிக்கு வேறு சில தகவல்களை அனுப்பினார்.’

தமிழ்நாட்டில் அக்கவுன்ட் ஓப்பன் பண்ண வேண்டும் என்று அமித் ஷா நினைக்க, மோடியோ அண்ணாமலையின் கட்சி வளர்க்கும் திட்டத்துக்கு ஆதரவாக இருந்தார். இதனால் பாஜக தலைமையில் ஒரு கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் என எதிர்க்கட்சி வாக்குகள் மூன்றாக சிதற திமுக கூட்டணி 40க்கு 40 வெற்றி பெற்றது.

தேர்தல் முடிவுக்குப் பிறகு அண்ணாமலையின் தன் முனைப்பு நடவடிக்கைகள்தான் கட்சியின் தோல்விக்கும் காரணம் என டெல்லிக்கு புகார்கள் சென்றன. தென் சென்னையில் போட்டியிட்டு இரண்டாம் இடம் பெற்ற தமிழிசை, ‘அதிமுகவோடு கூட்டணி அமைத்திருந்தால் திமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெற்றிருக்க முடியாது’ என வெளிப்படையாகவே விமர்சித்தார்.

7 பேர் மற்றும் மேடை படமாக இருக்கக்கூடும்

இந்த பின்னணியில்தான் ஜூலை 25, 26 தேதிகளில் இந்திய அளவில் பாஜகவின் மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடக்கிறது. அனைத்து மாநில பாஜக தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்கள். இந்த கூட்டத்துக்கு முன்பே அண்ணாமலை எடுத்த தவறான முடிவுகள் பற்றிய புகார்களை டெல்லிக்கு பலரும் அனுப்பியிருக்கிறார்கள்.

தேர்தல் முடிவுக்குப் பிறகு அண்ணாமலை பெரிதாக முன்புபோல அதிர்வு காட்டி பேசும் பழக்கத்தை குறைத்துக் கொண்டார். மேலும் திருச்சி சூர்யா போன்றவர்கள் அண்ணாமலைக்கு எதிராக மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார்கள். லேட்டஸ்டாக அந்த சர்ச்சைக்குரிய ரஃபேல் வாட்சை அண்ணாமலைக்கு பரிசாக கொடுத்ததே முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிதான் என்று பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட கல்யாணராமன் போட்டு உடைத்தார்.

இப்படி கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் கடும் எதிர்ப்புகளை பெற்றிருக்கும் அண்ணாமலை விரைவில் லண்டன் செல்ல திட்டமிட்டிருக்கிறார்.  அப்போது இடைக்காலத் தலைவராக வேறு ஒருவரை நியமித்துவிடுவார்கள் என்றும், அந்த இடைக் காலத் தலைவரை வைத்தே அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகம் வகுக்கப்படலாம் என்றும் அண்ணாமலைக்கு டெல்லியில் இருந்து தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

அதனால்தான் தான் அரசியலில் இருந்தே விலகிச் செல்லாலாமா என்று யோசித்ததாகவும், பாஜகவில் ஓர் உறுப்பினராக இருப்பதையே விரும்புவதாகவும் காம்ப்ரமைஸ் செய்துகொள்ளமால் இருப்பதால் ஓடும் வரை ஓடட்டும் என்றும் பேசி காரணிகளை செட் செய்துகொண்டிருக்கிறார் என்கிறார்கள் அண்ணாமலையைச் சுற்றியுள்ளவர்கள்.

மேலும் இதன் காரணமாக லண்டன் செல்லலாமா வேண்டாமா என்ற ஆலோசனையிலும் அண்ணாமலை ஈடுபட்டிருப்பதாகவும் கூறுகிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

உண்டியலில் காசு போடாதீங்க… ஒரு நிதியமைச்சர் இப்படி சொல்லலாமா? : தயாநிதி மாறன் காட்டம்!

மாணவர்கள் ரூ.1000 பெற ஆதார் அவசியம் : வேறு என்ன ஆவணங்கள் தேவை?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel