தந்தை பெரியாரின் சிலையை அகற்றுவேன் என்று சொல்லும் அண்ணாமலை வரலாறு தெரியாமல் பேசுகிறார் என்று கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். Annamalai needs navigation KP munusamy
ராணிப்பேட்டையில் அதிமுக மேற்கு மாவட்ட அலுவலக கட்டிடத்தை அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி இன்று (நவம்பர் 16) திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பெரியார், அறிஞர் அண்ணா குறித்து பேசி வருவது தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த பேசிய அவர், “இதனை வன்மையாக கண்டிக்கிறேன். பெரியார் கொண்டு வந்த பகுத்தறிவு சிந்தனைகளை சட்டமாக கொண்டு வந்தவர் பேரறிஞர் அண்ணா.
அண்ணாமலைக்கு இதை பற்றி என்ன தெரியும். நேற்று வரை காவல்துறையில் இருந்தார். இன்று ஏதோ ஒரு கட்சியில் இருந்து கொண்டு வாய்ப்பு கிடைத்துவிட்டது என்று வரலாறு தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்.
அவருக்கு நாவடக்கம் வேண்டும். ஏனென்று சொன்னால், தந்தை பெரியாரின் சிலையை அகற்றுவேன் என்று சொல்கிறார்.
தந்தை பெரியாரின் சிலை ஏன் அங்கு வைக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னால்,
2000 ஆண்டுகளாக நாங்கள் தனித்தன்மையோடு இருக்கிறோம் என்ற ஒரு கூட்டம் இறைவனை காட்டி காட்டியே அனைத்து சமூக மக்களையும் அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள்.
இறைவனை காட்டி அடிமையாக வைத்திருக்கிறீர்களே என்று தந்தை பெரியார் பகுத்தறிவு சிந்தனையோடு அன்று போர் குரல் கொடுத்தார்கள். அந்த போர் குரலை மக்கள் ஏற்றுக் கொண்டு அடிமைத்தனத்தில் இருந்து விடுபட்டுள்ளனர்.
இன்றைக்கு தமிழகம் அனைத்து துறைகளிலும் முதன்மையாக இருக்கிறது என்றால் திராவிட இயக்கம் 50 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்ததால் தான்.
இதை பற்றியெல்லாம் அண்ணாமலைக்கு தெரிவதற்கு வாய்ப்பில்லை. ஊடகங்களின் முன்னால் நின்று கொண்டு வரலாறு பேசுகிறார்.
அதுவும் தவறான கருத்துக்களை தான் சொல்லிக் கொண்டிருக்கிறார். பெரியாரை பற்றி பேசுவதற்கும், அறிஞர் அண்ணாவை பற்றி பேசுவதற்கும் அவருக்கு எந்த விதமான தார்மீக உரிமையும் இல்லை” என்று தெரிவித்தார். Annamalai needs navigation KP munusamy
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு!
முருகதாஸ் இயக்கும் SK 23 படத்தில் மோகன்லால்?