குழந்தைக்கு பெயர்சூட்டிய அண்ணாமலை… ஷாக் ஆன பாஜகவினர்!

அரசியல்

பாஜக நிர்வாகி ஒருவரின் குழந்தைக்கு ‘ஆருத்ரன்’ என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பெயர் வைத்துள்ளார்.

இன்று (ஜூலை 15) பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தருமபுரி மாவட்டத்திற்கு சென்றார் பாஜக தலைவர் அண்ணாமலை. தருமபுரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்காக மக்களவைத் தேர்தலில் பணியாற்றிய பாஜக நிர்வாகிகளைச் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து பென்னாகரத்தில், மீனவர் அணி மாநிலச் செயலாளர் மூர்த்தி திருமண விழாவில் கலந்துகொண்டார்.

அப்போது பென்னாகரம் கிழக்கு மண்டல் தலைவர் நோன்பரசு தனது மகனுக்கு பெயர் சூட்டும்படி அண்ணாமலையிடம் கேட்டுக்கொண்டார். இதையடுத்து அக்குழந்தைக்கு ‘ஆருத்ரன்’ என்று பெயர் சூட்டினார் அண்ணாமலை.

ஆருத்ரன் என்பதன் பொருள் சிவபெருமான் அல்லது சிவன் வடிவமாகும்.

ஆனால் ஆருத்ரன் என்று அண்ணாமலை பெயர் வைத்தது அங்கிருந்த பாஜகவினரிடையே பேசு பொருளாகியிருக்கிறது.

சென்னை அமைந்தகரையில் செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிறுவன முறைகேட்டுக்கும் பாஜகவினருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

பா.ஜ.க ஓ.பி.சி பிரிவு மாநில துணைத் தலைவரும், திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷுக்கு இதில் தொடர்பிருப்பதாக கூறி அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

தற்போது பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிலும் ஆருத்ரா நிதி நிறுவனத்தின் பெயர் பெருமளவில் அடிபட்டது.

இந்த நிலையில்தான் குழந்தைக்கு ஆருத்ரன் என பெயர் வைத்ததும், பாஜக தலைவரான அண்ணாமலையையும் ஆருத்ரா என்ற பெயரையும் பிரிக்க முடியாது போல என்று பாஜக நிர்வாகிகளே கிசுகிசுத்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

பிரியா

இன்று காமராஜர் பிறந்தநாள்!

‘சண்டாளர்’ சாதி பெயரை பயன்படுத்த கூடாது : பழங்குடியின ஆணையம்!

+1
0
+1
5
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

1 thought on “குழந்தைக்கு பெயர்சூட்டிய அண்ணாமலை… ஷாக் ஆன பாஜகவினர்!

  1. “ஏற்கனவே நான் ஆருத்ரானு பேரக் கேட்டாலே, பயங்கர டென்சன் ஆகுறேன், இந்த நேரத்துல வந்து குழந்தைக்கு பேரு வய்ய்யினு வந்து நின்னாக்க, நான் என்ன பண்ணுவேன்?”- இந்த மனநிலையில இருந்துருப்பாரோ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *