டெல்டா நிலக்கரி சுரங்கம் : டெல்லியில் அண்ணாமலை

அரசியல்

மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (ஏப்ரல் 5) சந்தித்தார்.

ஆறாவது நிலக்கரி சுரங்க ஏலத்தில் தேர்வான 29 நிறுவனங்களுடன் மத்திய அரசு கையெழுத்திட்டுள்ள நிலையில், சுரங்கங்களின் நிலக்கரி விற்பனை தொடர்பான 7வது சுற்று ஏலம் கடந்த மார்ச் 29ஆம் தேதி தொடங்கியது.

அதன்படி, ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, பீகார் உள்ளிட்ட 11 மாநிலங்களில் 106 நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க ஏலம் கோரப்பட்டுள்ளது.

குறிப்பாக, தமிழ்நாட்டில் தஞ்சாவூர், அரியலூர், கடலூர் மாவட்டங்களில் புதிதாக நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க ஏலம் கோரப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கம் அமைக்க பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு நேற்று(ஏப்ரல் 4) கடிதம் எழுதியிருந்தார்.

”முதலமைச்சராக மட்டுமின்றி, நானும் ஒரு டெல்டாக்காரன் என்ற முறையில் அங்கு அறிவிக்கப்பட்டுள்ள மத்திய அரசின் நிலக்கரி சுரங்க ஏலத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காது என்பதை உறுதியாக தெரிவித்துகொள்கிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த நிலையில், மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று(ஏப்ரல் 5) சந்தித்தார். அப்போது, தமிழக விவசாய நிலங்களில் நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதைத் தவிர்க்குமாறு கோரிக்கை மனு அளித்தார்.

இதுதொடர்பாக அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, விவசாயிகள் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து, விவசாயிகளுக்கு என்றென்றும் துணை நிற்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

அட்டப்பாடி கொலை வழக்கு: தண்டனை விவரம்!

கொரோனா: ஆரம்பமாகிறது வொர்க் ஃப்ரம் ஹோம்!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *