தென்னாப்பிரிக்கா பயணம் செல்லும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்பட நால்வர் கொண்ட குழு டெல்லியில் இன்று அக்கட்சி தேசிய தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்தனர்.
தென்னாப்பிரிக்காவில் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி ஜூலை 18-ஆம் தேதி பிரிக்ஸ் அரசியல் கட்சிகள் உச்சி மாநாட்டை நடத்துகிறது. இதற்காக பிரிக்ஸ் நாடுகளை சேர்ந்த அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜோகன்னஸ்பெர்க் நகரில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பிரிக்ஸ் நாடுகளின் பரஸ்பர நலன்களை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பாஜக சார்பில் அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை, மத்திய குஜராத் பாஜக ஊடக பொறுப்பாளர் சத்யன்குலாப்கர், ஆந்திரபிரதேச பாஜக மாநில மகிளா மோர்ச்சா பொறுப்பாளர் விணுஷா ரெட்டி, உத்தரபிரதேச பாஜக மாநில செயற்குழு மற்றும் கொள்கை ஆராய்ச்சி துறை ஒருங்கிணைப்பாளர் புஷ்கர் மிஷ்ரா ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நால்வர் குழு பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை டெல்லியில் இன்று சந்தித்து அவரது வழிகாட்டுதல்கள் மற்றும் வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டனர்.
செல்வம்
பொது சிவில் சட்டத்தை கைவிட வேண்டும்: ஸ்டாலின் கடிதம்!
மீண்டும் துவங்கிய தென்காசி மறு வாக்கு எண்ணிக்கை!