அண்ணாமலை அமித்ஷா சந்திப்பு: நடந்தது என்ன?

அரசியல்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் கர்நாடகா தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சமீபத்தில் பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் அணிகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, “நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்தால் பாஜக தலைவர் பதவியை ராஜினிமா செய்வேன்” என்று தெரிவித்தது அரசியல் அரங்கில் மிக முக்கியமான பேசுபொருளானது.

இதனை தொடர்ந்து மார்ச் 22-ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற்ற பிஎம் மித்ரா ஜவுளி பூங்கா திட்டத்தை துவக்கி வைக்க வருகை தந்த மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயலை அண்ணாமலை சந்திக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அண்ணாமலைக்கும் டெல்லி தலைமைக்கும் இடைவெளி அதிகமாகிக்கொண்டே போகிறதா என்று கேள்விகள் எழுந்தன.

இந்தநிலையில் நேற்று (மார்ச் 23) காலை 10.30 மணியளவில் சென்னையிலிருந்து விமானம் மூலம் பாஜக முக்கிய தலைவர்களை சந்திப்பதற்காக அண்ணாமலை டெல்லி சென்றார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த பிறகு அண்ணாமலை அமித்ஷாவை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பில் கர்நாடகா சட்டமன்ற தேர்தல் இணைப் பொறுப்பாளராக இருக்கும் அண்ணாமலை கர்நாடகா தேர்தல் குறித்தும் தமிழ்நாடு பாஜக விவகாரங்கள் தொடர்பாக பேசியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அண்ணாமலை, அமித்ஷா சந்திப்பு தமிழக அரசியல் சூழலில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

செல்வம்

டிஜிட்டல் திண்ணை: பன்னீர் பாலிடிரிக்ஸ்… அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க அபாயம்?  

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

+1
0
+1
2
+1
0
+1
3
+1
4
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *