ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பணம் கொடுக்கும் வீடியோ குறித்து அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.
கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை ஆரத்தி எடுக்கும் பெண் ஒருவருக்கு பணம் கொடுப்பது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில், இந்த வீடியோ குறித்து விசாரணை நடந்து வருவதாக கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார்.
இந்த வீடியோ தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ள பாஜக தலைவர் அண்ணாமலை, “ஒரு காணொளியின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்கும் அத்தனை ஆதாரங்கள் இருந்தும், அதற்குப் பதிலாக கோவை மாவட்ட ஆட்சியர்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 29.07.2023 அன்று, என் மண் என் மக்கள் யாத்திரையின் போது எடுக்கப்பட்ட ஒரு காணொளிக்கு, தற்போது நடவடிக்கை எடுக்க முயற்சிக்கிறார்.
அன்பு மற்றும் மரியாதையின் அடையாளமாக, ஆரத்தி எடுப்பவர்களுக்கு வெகுமதி அளிப்பது தமிழகக் கலாச்சாரத்தில் உள்ளது. தேர்தல் நேரத்தில் மட்டும் இதனை நாங்கள் கடைப்பிடிப்பதில்லை.
பிறரைப் போல, பணத்தின் மூலம் கிடைக்கும் வாக்குகளில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை நாங்கள் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளோம். இன்று இதுபோன்ற பொய்களைப் பரப்பும் கட்சிகள், உண்மையில் வாக்குகளுக்காக பணம் கொடுக்கும்போது நடவடிக்கை எடுக்க, கோவை ஆட்சியர் விழிப்புடன் இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார் அண்ணாமலை.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மாஸ் ஆக்சன் ஹீரோவாக பிரபுதேவா… முசாசி புது வீடியோ வெளியானது!
”பாஜக ஆட்சியில் 90% வழக்குகள் எதிர் கட்சியினர் மீது தான்” : கனிமொழி குற்றச்சாட்டு!