தமிழக முதல்வர் ஸ்டாலினை பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்திய ரிசர்வ் வங்கி புழக்கத்தில் இருக்கும் ரூ.2,000 நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தது. இதற்குத் தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.
“500 சந்தேகங்கள், 1000 மர்மங்கள், 2000 பிழைகள்! கர்நாடகப் படுதோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம்!” என்று விமர்சித்திருந்தார்.
முதல்வரின் பதிவை ரீ ட்வீட் செய்து கள்ளச்சாராயம் மரணத்தைக் குறிப்பிட்டு பதிலடி கொடுத்துள்ளார் அண்ணாமலை.
“கள்ளச்சாராயத்தால் 22 மரணங்கள், உயிர் இழப்பிற்குக் காரணமானவருக்கு 50,000 ரூபாய் இழப்பீடு, திமுகவினர் நடத்தும் சாராய ஆலைகள், டாஸ்மாக் வருமானம் 50,000 கோடி, இவை எல்லாம் மறைக்க, நீங்கள் ஓடுவீர்கள் தமிழைத் தேடி. பாசமா? எல்லாம் வேஷம்!” என்று குறிப்பிட்டுள்ளார் அண்ணாமலை.
பிரியா
500 சந்தேகங்கள், 1000 மர்மங்கள், 2000 பிழைகள்: மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
தலைமைச் செயலகமாக மாறுகிறதா ஓமந்தூரார் மருத்துவமனை?: அமைச்சர் விளக்கம்!
அண்ணாமலைண்ணா, ஒங்க சின்ராசுதான் இப்ப கர்நாடகத் தோல்வியை மறைக்க, காங்கிரஸ் பதவியேற்பு விழாவை டம்மியாக்க, நேரம் பார்த்து, விஷமத்தனமா, 2000 ரூவா நோட்டு செல்லாதுனு அறிவிச்சிருக்காரு; நாடே காறித் துப்புது…