அண்ணாமலைக்கு அச்சுறுத்தல் : பாதுகாப்பு அதிகரிப்பு!

அரசியல்

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ‘Z பிரிவு’ பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணையமைச்சர் ஆனதை தொடர்ந்து அந்த பொறுப்புக்கு மாநிலத் துணைத் தலைவராக இருந்த அண்ணாமலை நியமிக்கப்பட்டார்.

அப்போது முதல், தான் வெளியிடும் அதிரடி கருத்துகள் மூலம் தமிழ்நாட்டு அரசியலில் பாஜகவை அடையாளப்படுத்தி வருகிறார். அதே வேளையில் தனது கருத்துகளின் மூலம் தொடர்ந்து சர்ச்சைகளிலும் அண்ணாமலை சிக்கி வருகிறார்.

இந்நிலையில், அண்ணமலைக்கு மாவோயிஸ்டுகள், மத தீவிரவாதிகளிடமிருந்து மிரட்டல் வருவதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இது தொடர்பாக கடந்த 2 நாட்களாக மத்திய உள்துறையை சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள் அண்ணாமலையின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வந்து சோதனை செய்தனர். இதற்கான ஒப்புதல் கையெழுத்தும் அண்ணாமலையிடம் பெறப்பட்டது.

இதனையடுத்து, தற்போது `Y’ பிரிவு பாதுகாப்பில் உள்ள அண்ணாமலைக்கு ’Z’ பிரிவாக உயர்த்த அமித் ஷாவின் கட்டுபாட்டில் உள்ள மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

அண்ணாமலைக்கு இனி 24 மணி நேரமும் அவர் தங்கும், செல்லும் இடங்களில் 20-க்கும் மேற்பட்ட கமாண்டோக்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு அளிக்க உள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஓபிஎஸ் ஆகியோருக்கான Z பிரிவு பாதுகாப்பு சில மாதங்களுக்கு முன்னர் விலக்கிக்கொள்ளப்பட்டது.

தற்போது தமிழ்நாட்டில் பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு மட்டும் Z பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்டோபர் ஜெமா

ஆளுநர் மாளிகை முற்றுகை: திருமாவளவன் கைது!

மனிதக்கழிவு கலந்த விவகாரம்: சமூகநீதி கண்காணிப்புக்குழு ஆய்வு!

+1
0
+1
3
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0

1 thought on “அண்ணாமலைக்கு அச்சுறுத்தல் : பாதுகாப்பு அதிகரிப்பு!

  1. மத்திய அரசா ஒன்றிய அரசா
    புரிஞ்சிதா அரை வேக்காடுகள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *