ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு அண்ணாமலை பணம்?: விசாரணைக்கு உத்தரவு!

அரசியல்

அரத்தி எடுத்த பெண்ணுக்கு அண்ணாமலை பணம் கொடுப்பது போல வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கும் நிலையில், இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கோவையில் பாஜக சார்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன், திமுக சார்பில் கணபதி ராஜ்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

நாம் தமிழர் கட்சியோடு சேர்த்து கோவையில் நான்குமுனை போட்டி நிலவுகிறது.

இதனால் அந்தந்த அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை சூலூரில் இன்று கணபதி ராஜ்குமாரை ஆதரித்து திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி வாக்குசேகரித்தார்.

மறுபக்கம் சிங்காநல்லூர் பகுதியில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்  வாக்குசேகரித்தார்.

இப்படி தேர்தல் களம் அனல் பறந்துகொண்டிருக்க அண்ணாமலை குறித்த வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

கோவையில்  நேற்று தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆர்த்தி எடுத்த பெண்ணுக்கு அண்ணாமலை, ஆரத்தி தட்டுக்கு அடியில் வைத்து பணம் கொடுப்பது போன்று அதில் பதிவாகியிருக்கிறது.

இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்  தனது ட்விட்டர் பகக்த்தில் தெரிவித்துள்ளார்.

காவல்துறை சரிபார்ப்புக்காக வீடியோ அனுப்பப்பட்டுள்ளதாகவும், விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கணேசமூர்த்தியின் கடைசி நாட்கள்… முதல்வருக்கு சென்ற சீக்ரெட் ரிப்போர்ட்!

தேர்தல் பிரச்சாரம் : காங்கிரஸ் தொகுதிக்கு செல்ல கமல் மறுப்பு?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *