கான்வாயில் தொங்கிய மேயர்: விளாசிய அண்ணாமலை
திமுக தன்னை சுயமரியாதை இயக்கம், சமூக நீதி இயக்கம், சாமானியர்களின் கட்சி என்று சொல்கிற போலி கதைகள் அனைத்தும் நீண்ட காலத்திற்கு முன்பே புதைக்கப்பட்டுவிட்டது என்று பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று (டிசம்பர் 10) நேரில் சென்று பார்வையிட்டார். அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
காசிமேட்டில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வில் ஈடுபட்டபோது, மேயர் பிரியா மற்றும் ஆணையர் ககன்தீப் சிங் பேடி இருவரும் முதல்வர் கான்வாயில் தொங்கியபடி சென்றனர். அப்போது ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்ததால், மேயர் பிரியா தனது முகத்தை மறைத்துக்கொண்டார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “திமுக தன்னை சுயமரியாதை இயக்கம், சமூக நீதி இயக்கம், சாமானியர்களின் கட்சி என்று சொல்கிற போலி கதைகள் அனைத்தும் நீண்ட காலத்திற்கு முன்பே புதைக்கப்பட்டுவிட்டது. இதனை வெளிப்படுத்தும் வகையில், நேற்று சென்னை மேயர் பிரியா மற்றும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் முதல்வருடைய கான்வாயில் தொங்கிக்கொண்டு சென்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.” என்று பதிவிட்டுள்ளார்.
செல்வம்
உலககோப்பை கால்பந்து: இங்கிலாந்தை அதிரவைத்த பிரான்ஸ்
காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்: சர்ச்சையான ஆர்யா பட டைட்டில்!