பிரியா மரணம் : “திமுக ஆட்சியில் மருத்துவத்துறை அழிந்து விட்டது” – அண்ணாமலை

அரசியல்

திமுக ஆட்சியில் ஒவ்வொரு அரசு துறையும் அழிந்து கொண்டிருக்கிற நிலையில் மருத்துவத்துறையும் சேர்ந்திருப்பது வேதனை அளிக்கிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று (நவம்பர் 15) தெரிவித்துள்ளார்.

சென்னை பெரியார் அரசு மருத்துவமனையில் மூட்டு சவ்வு அறுவை சிகிச்சை மேற்கொண்ட கால்பந்து விளையாட்டு வீராங்கனை பிரியா,

மருத்துவர்களின் கவனக்குறைவான சிகிச்சை காரணமாக இன்று சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

பிரியா உயிரிழந்தது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில்,

“அறுவை சிகிச்சையின் போது அரசு மருத்துவர்கள் தவறான சிகிச்சை வழங்கியதால் கல்லூரி மாணவி, கால்பந்து வீராங்கனை சகோதரி பிரியா சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

சகோதரி பிரியா அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த திறனற்ற திமுக ஆட்சியில் ஒவ்வொரு அரசு துறையும் அழிந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் மருத்துவ துறையும் சேர்ந்திருப்பது வேதனை அளிக்கிறது.

தவறான சிகிச்சை வழங்கிய அரசு மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.

திமுக அரசு சகோதரி பிரியா அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் நஷ்ட ஈடாக இரண்டு கோடி ரூபாய் அவரது குடும்பத்தாருக்கு உடனடியாக வழங்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

ஜப்பான் : ராஜூ முருகனின் தங்க அரசியல்!

தெலுங்கு சினிமாவின் புதுமைப்பித்தன் : ‘சூப்பர்ஸ்டார்’ கிருஷ்ணா

+1
0
+1
0
+1
0
+1
1
+1
2
+1
0
+1
0