தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு 9 நாட்கள் பயணம் மேற்கொண்டு கடந்த மாதம் 31ஆம் தேதி சென்னை திரும்பினார்.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஜப்பான் டோக்கியோவில் இருந்தபோது பாஜக வானதி சீனிவாசனும் அங்கிருந்ததாக அண்ணாமலை அவசர புகார் கடிதத்தை நட்டாவுக்கு அனுப்பியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வானதி குடும்பத்துடன் டோக்கியோவில் இருந்ததாகவும், இதற்கான விமான செலவு தங்கும் செலவு, உணவு மற்றும் போக்குவரத்து வசதிகளை திமுக பிரமுகர் ஒருவர் செய்ததாகவும் அப்புகாரில் தெரிவித்துள்ளாராம் அண்ணாமலை.
அண்ணாமலையை தூக்கிவிட்டு வானதியை மாநில தலைவராக்க மேலிடம் ஆலோசிப்பதால் இப்படியொரு புகார் அனுப்பப்பட்டுள்ளதாக சொல்லும் வானதி தரப்பு,
அவர் குடும்பத்துடன் டோக்கியோ சென்றது மட்டும் உண்மை. அங்கு ஸ்டாலினை சந்தித்தோம் என்பதெல்லாம் அப்பட்டமான பொய் என்கின்றார்கள்.
WTCFinal: தோல்வி முகத்தில் இந்தியா… கோலியை கைகாட்டும் கங்குலி
நடிகை ரோஜா மருத்துவமனையில் அனுமதி!