ராமநாதபுரம் : அண்ணாமலையின் பிரச்சாரத்தால் பன்னீருக்கு பின்னடைவு?

அரசியல்

ராமநாதபுரம் தொகுதியில்  பாஜக கூட்டணியில் இடம்பெற்று சுயேச்சையாக போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 13ஆம் தேதி பன்னீரை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர், “பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழகத்தில் பிடித்த முதல் தலைவர் ஓ.பன்னீர் செல்வம் தான். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முழு நம்பிக்கையைப் பெற்றவரும் ஓபிஎஸ் தான். மோடிக்கு பதிலாக ஓபிஎஸ் ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறார். அவரை 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று பேசியிருந்தார்.

பிரதமர் மோடியுடன் பன்னீரை ஒப்பிட்டு அண்ணாமலை பேசியது அவரது ஆதரவாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், தற்போது அதுவே பன்னீருக்கு பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளது.

மோடிக்கு பதிலாக ஓபிஎஸ் என்ற அண்ணாமலையின் பேச்சு, ஓபிஎஸ்சுக்கு நெருக்கமான மிக சில இஸ்லாமிய வாக்காளர்களையும் மாற்றிவிட்டது.

ஏற்கனவே அதிமுகவில் இருந்தவர் என்ற முறையில் அக்கட்சியைச் சேர்ந்த இஸ்லாமிய பிரமுகர்களை தொடர்புகொண்ட ஓபிஎஸ், ‘நான் என்றைக்கும் அதிமுக காரன் தான். அதனால்தான் தாமரை சின்னத்தில் நிற்காமல் சுயேச்சை சின்னமான பலா பழத்தில் நிற்கிறேன்.  எனவே நீங்கள் எனக்கு வாக்களிக்க வேண்டும்’ என்று பேசிவந்தார். பன்னீரின் இந்த அணுகுமுறையால்  ஓபிஎஸ் மீது கொஞ்சம் சாஃப்ட் கார்னராக இருந்த  சில இஸ்லாமியர்களும் அண்ணாமலை பேச்சால் பன்னீருக்கு எதிரான நிலை எடுக்க தயாராகிவிட்டனர்.

மேலும், திமுக கூட்டணியில் போட்டியிடும் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனிக்காக ஜமாத்துகள் கடுமையாக வேலை செய்து வருகின்றன.  ‘தமிழ்நாட்டிலேயே ஒரு முஸ்லிம் வேட்பாளர்னா அது நவாஸ் கனிதான். இவரை நாம விட்டுடக் கூடாது.  ரம்ஜான் விடுமுறைக்காக வெளிநாடுகளில் இருந்து ஊர்க்கு வந்திருக்கிற எல்லாரும் நவாஸ் கனிக்கு ஓட்டுப் போட்டுட்டு  தேர்தல் முடிஞ்ச பிறகுதான்  திரும்ப பயணம் போகணும்’ என்று கட்டளையிட்டுள்ளார்கள். ரம்ஜானுக்கு ஊருக்கு வராதவர்களையும் கூட தேர்தலுக்காக அழைத்து வரும் வேலையிலும் இறங்கியுள்ளனர்.

இதன்மூலம்  ஒட்டுமொத்த சிறுபான்மையினரின் ஓட்டுகளையும் தங்கள் பக்கம் கவனமாக இழுத்து வருகிறது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மின்னம்பலம் மெகா சர்வே: நாகப்பட்டினம்… வெல்லப் போவது யார்?

மக்களவை தேர்தல்: போக்குவரத்து துறை முக்கிய அறிவுறுத்தல்!

 

+1
0
+1
0
+1
0
+1
7
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *