பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இசை அமைப்பாளர் தினா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக பாஜகவின் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் மாநிலத் தலைவராக இருந்த காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து, ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுவதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கடந்த நவம்பர் 22ஆம் தேதி உத்தரவிட்டார்.
தன்னிடம் எந்த விளக்கமும் கேட்காமல் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் தொடர்ந்து கட்சி பணியைச் செய்வேன் என்றும் காயத்ரி ரகுராம் கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து அவர் அண்ணாமலை மீது பல குற்றச்சாட்டுகளையும் கூறி வந்தார்.
இந்நிலையில் அவர் வகித்த பதவிக்கு இசையமைப்பாளர் தினாவை நியமித்து அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.
பாஜகவின் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் மாநில துணைத் தலைவராக ஆனந்த் மெய்யாசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு திருச்சி சூர்யா மற்றும் டெய்சி பேசிய ஆடியோ வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளானது. இது தொடர்பாக காயத்ரி ரகுராம் டெய்சிக்கு ஆதரவாகப் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
பாபா டிரெய்லர்: ரசிகர்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா?
கிரிவலத்தை 1.52 மணி நேரத்தில் சுற்றி வந்த டிஜிபி!