அன்னபூர்ணா உரிமையாளர் வீடியோ வெளியீடு: மன்னிப்பு கேட்ட அண்ணாமலை

அரசியல்

ஜிஎஸ்டி குறித்து கோவை அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேள்வி கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து சீனிவாசன், நிர்மலா சீதாராமனை சந்தித்து மன்னிப்பு கேட்ட சம்பவம் தேசிய அளவில் பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த வீடியோவை பாஜகவை சேர்ந்த சிலர் வெளியிட்டதற்காக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில்,  “மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசனுக்கும் இடையே நடைபெற்ற தனிப்பட்ட உரையாடலை பாஜகவைச் சேர்ந்த சில கட்சி நிர்வாகிகள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

அன்னபூர்ணா சீனிவாசன் அண்ணா, தமிழ்நாட்டின் வணிக சமூகத்தின் தூணாக இருக்கிறார். அவரை தொடர்புகொண்டு அவரது தனியுரிமை மீறப்பட்டதற்காக நான் வருத்தம் தெரிவித்தேன்.

மாநில மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அவர் அளித்து வருகிறார். இந்த விவகாரத்தை உரிய மரியாதையுடன் முடித்து வைக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“அன்னபூர்ணா உரிமையாளரிடம் ஆணவத்தில் பதிலளித்த நிர்மலா சீதாராமன்”: ராகுல், கார்கே கண்டனம்!

அன்னபூர்ணா உரிமையாளரை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்தோமா? – வானதி சீனிவாசன் பேட்டி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *