எடப்பாடி பழனிசாமி காலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வருவதால் தான் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கவில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைத்து 9 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி வேலூரில் ஜூன் 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்திருந்தார்.
தமிழகம் வந்த அமித்ஷாவை பாஜக நிர்வாகிகள் சந்தித்த நிலையில் கூட்டணி கட்சியான அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரை சந்திக்கவில்லை.
இந்நிலையில், இன்று (ஜூன் 14) சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளகர்களை சந்தித்தார். அவரிடம் தமிழகம் வந்த அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திக்காதது ஏன் என்ற கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்துப் பேசிய அண்ணாமலை, “தமிழகம் வரும் அமித்ஷா, எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வேண்டும் என்று என்னிடம் கேட்டார். அமித்ஷா இங்கு வருவதற்கு முன்பே எடப்பாடி பழனிசாமியுடன் உணவு சாப்பிடலாம், அவர் சென்னையில் இருக்கிறாரா என்று பார்த்து சொல் என்றார். நான் எடப்பாடி பழனிசாமிக்கு போன் செய்தேன்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி காலில் பிரச்சனை இருப்பதால் சேலத்தில் சிகிச்சை பெற்று கொண்டிருந்தார். அதனால் தான் அவரால் வர முடியவில்லை. நாங்கள் யாரையும் புறக்கணிக்கவில்லை, உதாசீனப்படுத்தவில்லை” என்று தெரிவித்தார்.
மோனிஷா
“நான் சிட்டிங் மந்திரி…” -அமலாக்கத் துறையிடம் கத்திய செந்தில்பாலாஜி
டிஜிட்டல் திண்ணை: செந்தில்பாலாஜியின் துறைகள் யாருக்கு? கேபினட் ரேஸ் ஸ்டார்ட்!