வட இந்தியர்கள் குறித்து திமுக எம்பிக்கள் பேசிய கீழ்த்தரமான கருத்துக்கள் அவர்களுக்கு எதிரான மனநிலையை தூண்டியுள்ளது என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழ் மக்களாகிய நாங்கள், “உலகத்தில் உள்ள அனைவரும் ஒன்று” என்ற கருத்தை நம்புகிறோம். வட இந்திய நண்பர்களுக்கு எதிரான பிரிவினைவாதத்தையும் கேவலமான வெறுப்பையும் நாங்கள் ஆதரிக்கவில்லை.
ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய மில்ஸ் அசோசியேஷன் ஆகியவை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நலனை உறுதிப்படுத்த அவர்கள் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை ஒன்றை ஏற்கனவே வெளியிட்டுள்ளனர்.
உள்கட்டமைப்பு மேம்பாடு, உற்பத்தித் தொழில் மற்றும் சேவைத் துறையில் புலம்பெயர்ந்த சகோதர சகோதரிகளின் பங்களிப்பை தமிழ்நாட்டின் பொது மக்கள் ஏற்றுக்கொண்டு வரவேற்கின்றனர்.
வட இந்தியர்களைப் பற்றி திமுக எம்பிக்களின் கீழ்த்தரமான கருத்துக்கள், திமுக அமைச்சர் அவர்களை பானிபூரி வாலா என்று அழைத்தது மற்றும் கூட்டணிக் கட்சியினர் அவர்களை வெளியேற்றக் கோருவது போன்றவை வட இந்தியர்களுக்கு எதிரான மனநிலையை தூண்டியுள்ளது. திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் கருத்துகளை மக்களும், அரசும், காவல்துறையும் ஆமோதிப்பதில்லை.
திமுக எப்பொழுதும் கடைபிடித்து வரும் பிரிவினைவாதம் அவர்களுக்கே பிரச்சனையாக மாறியுள்ளது. இப்போது இந்த நிலையை சரிசெய்வதன் மூலம் அவர்களின் செயலிழந்த பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
வட மாநில தொழிலாளர்கள் விவகாரம் – முதல்வர் ஆலோசனை!
புலம்பெயர் தொழிலாளர்கள்… போலி வீடியோக்கள்: உண்மை ரிப்போர்ட்!