முன்னாள் முதல்வர் அண்ணாவின் 55-வது நினைவு தினம் இன்று (பிப்ரவரி 3) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி திமுக சார்பில் சென்னையில் இன்று அமைதிப் பேரணி நடைபெற்றது.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில், சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையிலிருந்து அண்ணா நினைவிடம் வரை அமைதிப் பேரணியானது நடைபெற்றது.
இந்த பேரணியில் திமுக பொருளார் டி.ஆர்.பாலு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை பொதுச்செயலாளர்கள் பொன்முடி, ஆ.ராசா, கனிமொழி, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து அண்ணா நினைவிடத்தில் திமுக நிர்வாகிகள் அனைவரும் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
பேரணியில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கருப்பு ஆடை அணிந்து, அண்ணாவுக்கு வீரவணக்க கோஷங்கள் எழுப்பி மரியாதை செலுத்தினர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…