மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று (பிப்ரவரி 3) திமுக சார்பில் அமைதி பேரணி சென்று மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்பட்டது.
பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
அவரது நினைவு தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு அருகே,
அமைதி பேரணியை துவங்கி வாலாஜா சாலை வழியாக மெரினா கடற்கரைக்கு திமுக நிர்வாகிகள் சென்றனர்.

பின்னர் மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் ஸ்டாலின் மற்றும் கட்சி நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த பேரணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டனர். திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செல்வம்
சென்னை ஏடிஎம்மில் ரூ.200-க்கு பதிலாக ரூ.500 வந்த விநோதம்!
கன மழை: எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை?