பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது திருவுருவ சிலைக்கு அரசியல் கட்சிகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அவரது பிறந்த நாளையொட்டி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இன்று (செப்டம்பர் 15) காலை சிற்றுண்டி உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
மதுரை நெல்பேட்டையில் இருக்கும் பேரறிஞர் அண்ணாவின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
சென்னை, அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள அவரது புகைப்படத்திற்கு எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதுபோன்று, ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்று மரியாதை செலுத்தினார்.
தஞ்சாவூர் மாவட்டம், அருளானந்த நகரில் உள்ள பேரறிஞர் அண்ணா இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் புகைப்படத்திற்கு சசிகலா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

கோவை அவிநாசி சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு அமமுக தலைவர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சென்னை, அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த பின்பு, சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள அவரது புகைப்படத்திற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
செல்வம்
சிறப்புக் கட்டுரை: அண்ணா ஒரு குழந்தை!