சென்னையில் இன்று (ஜூன் 12) முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வாழ்த்து பெற்றார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த புகழேந்தி ஏப்ரல் 6ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார்.
இந்நிலையில், அந்த சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் சார்பாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா வேட்பாளராக நேற்று (ஜூன் 11) அறிவிக்கப்பட்டார்.
முன்னதாக, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக அமைச்சர் பொன்முடியின் மகன் கெளதம சிகாமணி நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று (ஜூன் 12) சென்னை அண்ணா அறிவாலயத்தில் விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அப்போது திமுக துணை பொதுச்செயலாளர் பொன்முடி, கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா, செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் தயாநிதி மாறன், விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கெளதம சிகாமணி ஆகியோர் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதன் பின்னர், அன்னியூர் சிவா விக்கிரவாண்டி தொகுதிக்கு நேரில் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்தியின் அசரவைக்கும் அப்டேட் – அடுத்தடுத்து இத்தனை படங்களா?
“தமிழிசையை அவமதித்த அமித்ஷா” – கேரள காங்கிரஸ் கண்டனம்!