அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கின் விசாரணை வரும் அக்டோபர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கடந்த 2001 முதல் 2006ம் ஆண்டு வரை அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தங்களையும் இணைக்க கோரி அமலாக்கத் துறையினர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், மனு மீதான உத்தரவு இன்று பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இ-ஃபைலிங் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் இந்த வாரம் முழுவதும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனையடுத்து இன்று அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம், விசாரணையை வரும் அக்டோபர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
கிறிஸ்டோபர் ஜெமா
நாளை டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி
டிரெண்டாகும் அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன் திருமண புகைப்படங்கள்!