anita radhakrishnan case moved to august 2

அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு ஒத்தி வைப்பு!

அரசியல்

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கு தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

தமிழ்நாடு அரசின் மீன் வளத்துறை அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் மீது தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த 2001-2006 அதிமுக ஆட்சிக் காலத்தில் அவர் அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.4.90 கோடி சொத்து குவித்ததாக திமுக அரசு கடந்த 2006ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தங்களையும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பில் மனு அளிக்கப்பட்டது.

அதன் மீது முடிவெடுக்கப்படாமல் இருந்து வந்த நிலையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு இன்று (ஜூலை 19) தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியுள்ளது.

மேலும் வழக்கு விசாரணைக்காக அனிதா ராதாகிருஷ்ணனின் மகன்கள் ஆனந்த மகேஸ்வரன், ராமகிருஷ்ணன் இருவரும் நீதிமன்றத்தில் இன்று காலை ஆஜராகினர். அமலாக்கத்துறை தரப்பில் வழக்கறிஞர் ரமேஷ் ஆஜரானார்.

இந்தநிலையில் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

பேருந்தில் உம்மன் சாண்டி உடல்: கண்ணீருடன் பொதுமக்கள் அஞ்சலி!

மகளிர் உரிமைத் தொகை: ’வாட்சப் தகவலை நம்ப வேண்டாம்’- ராதாகிருஷ்ணன்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *