அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ கிராம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அமாலாக்கத் துறை சோதனையைத் தொடர்ந்து மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை காலை முதலே பல்வேறு அமைச்சர்களும் சென்று நலம் விசாரித்தனர். முதல்வர் ஸ்டாலின் காலை 10 மணிக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார்.
இன்று காலை முதலே மருத்துவமனையில் இருந்து வரும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செந்தில் பாலாஜிக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்து வருகிறார்.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ கிராம் செய்யப்பட்டதாகவும், அந்த பரிசோதனை தற்போது நிறைவடைந்திருப்பதாகவும் நியூஸ் 18 தமிழுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜிக்கு இதய செயல்பாடு எப்படி இருக்கிறது என்று முழுமையாக சோதனை செய்த பிறகு அடுத்தகட்ட சிகிச்சை அளிப்பது குறித்து மருத்துவர்கள் ஆலோசித்து வருவதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரியா