பாமக, தேமுதிக உடன் அதிமுகவின் கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் முடியாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதிமுக பாஜகவுடன் போய்விடுமோ என்ற சந்தேகத்தில் தான் பாமகவும், தேமுதிகவும் இன்னும் கூட்டணியை முடிக்காமல் இழுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
பாமக சார்பில் பாஜகவிடம் பேசும்போது கேபினெட் மினிஸ்டர் பதவி கேட்டிருக்கிறார் அன்புமணி. ஆனால் பாஜக சார்பில் அதைக் கொடுக்க வாய்ப்பில்லை என்கிறார்கள். நாங்கள் 350 முதல் 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று சொல்லி வருகிறோம். இந்த நேரத்தில் உங்களுக்கு கேபினெட் மினிஸ்டர் பதவி ஒதுக்கினால், நாங்கள் பலவீனமானதான ஒரு தோற்றம் உருவாகிவிடும். அதனால் முதலில் எங்களுக்கு ஆதரவு கொடுங்க. மற்றதைப் பின்னால் பார்க்கலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.
ராஜ்யசபா எம்.பி பதவியாவது கண்டிப்பாக பெற்றுவிட வேண்டும் என்று குறியாக இருக்கிறார்அன்புமணி. பாஜகவால் தமிழ்நாட்டிலிருந்து ராஜ்யசபா எம்.பி கொடுக்க முடியாது, அதற்கான பலம் அவர்களிடம் இல்லை, வேறு மாநிலத்திலிருந்து ஏதேனும் கொடுத்தால்தான் உண்டு. ஆனால் அதிமுக என்றால் இங்கேயே ராஜ்யசபா சீட்டு கொடுக்க முடியும் என்பதால் நம்பலாம் என்பது அன்புமணியின் கணக்காக இருக்கிறதாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
எலெக்சன் ஃப்ளாஷ்: ”எடப்பாடியுடன் தொடர்ந்து பேசுகிறது பாஜக” –ஆதரவாளர்களிடம் குமுறிய ஓ.பி.எஸ்
எலெக்சன் ஃப்ளாஷ்: பாஜக எவ்ளோ ட்ரை பண்ணாலும் வாய்ப்பில்ல..கதவு, ஜன்னலை மூடிய எடப்பாடி
கல்பாக்கம் ஈணுலை… உயிர்வாழ தகுதியற்றதாக தமிழ்நாடு மாறிவிடும் : சீமான் எச்சரிக்கை!