மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று (மே 25) இரவு நெல்லையில் உள்ள அவரது சகோதரர் வீட்டில் கால் தடுமாறி விழுந்ததில் வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், சென்னை அழைத்து செல்லப்பட்டார். சென்னையில் வைகோவுக்கு சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.
இந்தநிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வைகோ விரைவில் உடல் நலன் பெற வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (மே 26) தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவரது சகோதரர் வீட்டில் தவறி விழுந்ததில் வலது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக துரை வைகோ வெளியிட்ட அறிவிப்பைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்.
வைகோவுக்கு சென்னையில் மேற்கொள்ளப்படவுள்ள அறுவை சிகிச்சை வெற்றி பெற வேண்டும்; வைகோ விரைவில் முழுமையாக குணமடைந்து பொதுவாழ்வை தொடர வேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அன்புமணி ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தீவிரமடையும் ரிமால் புயல்: மோடி முக்கிய ஆலோசனை!