அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : முதல்வருக்கு அன்புமணி கோரிக்கை
அவனியாபுரத்தில் அனைத்து சமுதாயம் உள்ளடக்கிய ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
பொங்கல் வந்தாலே தமிழ்நாட்டு ஜல்லிக்கட்டு போட்டிகளும், அதோடு சர்ச்சைகளும் உயிர்பெற்றுவிடும். அதன்படி தற்போது உலகப்புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விவகாரம் சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்தது.
ஆண்டுதோறும் நடத்தப்படும் மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை கிராம ஜல்லிக்கட்டு கமிட்டிக்கும், தென்கால் பாசன விவசாயிகள் சங்கத்திற்கும் இடையே மோதல் நிலவி வந்தது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக கிராம நிர்வாகம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தியது.
இந்த நிலையில் அவனியாபுரம் கிராம ஜல்லிக்கட்டு கமிட்டி நிர்வாகிகள் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மதுரை விமான நிலையம் வந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸிடம் கூறினர்.
அதன் அடிப்படையில் அன்புமணி ராமதாஸ் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தற்போது கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ”அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பிரச்சனையை ஆராய்ந்து பார்த்ததில் அவனியாபுரத்தில் 4க்கும் மேற்பட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
பின்னர் ஒரே ஜல்லிக்கட்டு ஆக நடத்திட அரசு உத்தரவிட்ட பின்னர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.
இந்த ஜல்லிக்கட்டில் தெங்கால் விவசாய சங்கம் சார்பில் ஏ.கே. கண்ணன், பாக்கியம் ஆகியோர் பொருளாதாரம் ஈட்டும் நோக்கத்தில் ஈடுபட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களே உறுப்பினர் ஆக்கிக் கொண்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு உள்ளனர். மேலும் அவர்கள் பிற சமுதாயத்தினருக்கு தக்க மரியாதை தரவில்லை என தெரிகிறது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்த தனி நபருக்கோ அல்லது தனி ஒரு அமைப்புக்கோ அனுமதி வழங்காமல் இந்த ஜல்லிக்கட்டை அவனியாபுரம் அனைத்து சமுதாயம் உள்ளடக்கிய அவனியாபுரம் கிராம ஜல்லிக்கட்டு கமிட்டியிருக்கு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்திட அனுமதி வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
எல்லை மீறும் ரெட் ஜெயண்ட் : கடிவாளம் போடுமா தமிழ்நாடு அரசு?
’’இதனால தான் நீங்க தளபதி!” – ஷாருக்கான் சொன்ன சீக்ரெட்