பிடிஆர் ஆடியோ சர்ச்சை: அன்பில் மகேஷ் பதில்!

கடந்த 10 வருடங்களாக அதிமுக ஆட்சியில் சீரழிந்து போன நிதிநிலையை சீர்தூக்கி கொண்டு வரும் முயற்சியில் பிடிஆர் ஈடுபட்டுள்ளார். இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் அண்ணாமலை ஆடியோ வெளியிட்டுள்ளார் என்று அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (ஏப்ரல் 26) சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவர், “திமுக ஆட்சிக்கு வந்தபிறகு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் அதிமுக முறைகேடுகள் செய்துள்ளது. ரூ.2.18 கோடி தேவையற்ற செலவுகள் செய்துள்ளது சிஏஜி அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

ஆதிதிராவிட பழங்குடியின மக்களுக்கு வழங்க வேண்டிய வீடுகள் முறையாக வழங்காமல் அவர்களை வஞ்சித்துள்ளார்கள்.

ஒரு நிர்வாகம் எப்படி நடக்கக்கூடாது என்பதற்கு அதிமுக ஆட்சி எடுத்துக்காட்டாக உள்ளது” என்று தெரிவித்தார்.

பிடிஆர் ஆடியோ விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “ஏஐ தொழில்நுட்பத்தால் குரலை மாற்றி அமைத்து ஆடியோ வெளியிட்டுள்ளார்கள் என்று நிதியமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

10 வருடமாக அதிமுக ஆட்சியில் சீரழிந்து போன நிதிநிலையை சீர்தூக்கி கொண்டு வரும் முயற்சியில் பிடிஆர் ஈடுபட்டுள்ளார்.

இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் பாஜக தலைவர் அண்ணாமலை ஆடியோ வெளியிட்டுள்ளார் என்பது மிக தெளிவாகவே தெரிகிறது.

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை திமுக மீது சுமத்துவதே பாஜகவினருக்கு வழக்கமாக போய்விட்டது. அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக திமுக மீது ஆளுநரிடம் பாஜகவினர் புகார் தெரிவித்துள்ளனர்” என்று அன்பில் மகேஷ் கூறினார்.

செல்வம்

கேப்டன் மில்லர் படப்பிடிப்பு: தற்போதைய நிலவரம் என்ன?

மலையாள நடிகர் மாமுக்கோயா காலமானார்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts