புதிய கல்விக்கொள்கையை ஏற்காவிட்டால் தமிழ்நாட்டிற்கு நிதி வழங்கப்படாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறிய நிலையில், அதற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். anbil condemns dharmendra pradhan
மத்திய கல்வி அமைச்சக ஏற்பாட்டின் கீழ் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கம் 3.0 நிகழ்ச்சி இன்று (பிப்ரவரி 15) தொடங்கியுள்ளது.
இதில் பங்கேற்ற மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம், ”தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி வழங்காதது ஏன்?” என்று குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழ்நாட்டிற்கு நிதி விடுவிக்க சட்டத்தில் இடமில்லை. அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டால், புதிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே தமிழக அரசுக்குரிய கல்வி நிதி விடுவிக்கப்படும்” என தெரிவித்தார்.
மத்திய அமைச்சரின் இந்த பேச்சு தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பறித்துக்கொண்டதைக் கேட்கிறோம்; பிச்சையல்ல! anbil condemns dharmendra pradhan
இதுதொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முன்னாள் முதல்வரும், திமுக நிறுவனருமான அண்ணாவின் உரையை சுட்டிக்காட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதில், “வாழ்ந்தவர்கள் என்பதை நினைவூட்ட வரலாறு இருக்க,எதற்காக வடவரிடம் பிடரியைக் கொடுத்துவிட்டுப் பிறகு மெள்ள மெள்ள வலிக்கிறது வலிக்கிறது என்று வேதனைக் குரலொலித்துக் கிடக்க வேண்டும்?
மாதாவுக்கு மத்தாப்பு வண்ணச் சேலையா கேட்கிறோம்? அன்னையின் ஆடையை, அக்கிரமக்காரனே பிடித்திழுக்கத் துணிகிறாயே, ஆகுமா இந்த அக்கிரமம் என்றல்லவா கேட்கிறோம். உரிமையைக் கேட்கிறோம்; உபகாரமல்ல, இழந்ததைக் கேட்கிறோம்; இரவல் பொருளல்ல. எம்மிடமிருந்து பறித்துக்கொண்டதைக் கேட்கிறோம்; பிச்சையல்ல. இந்த மூலக்கருத்தை உணரா முன்னம் வடவரின் கொட்டம் அடக்கப்படுவது முடியாத காரியமாகும்” என்ற அண்ணாவின் கருத்தை பதிவிட்டுள்ளார்.