மாவட்டத்துக்கு ஒரு அதிகாரி: மழையை எதிர்கொள்ள தயாராகும் அரசு!

அரசியல்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மாவட்டத்துக்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயாராக உள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள அவசர கட்டுபாட்டு மையத்தில் இன்று (அக்டோபர் 6) ஆய்வு செய்த பின்னர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

கன்ட்ரோல் ரூம் நம்பர்கள் இதோ…

அப்போது பேசிய அவர், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு 1070 – 1077 என்ற உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர்களின் தொடர்பு மையம் 1077. இரண்டு கன்ட்ரோல் மையங்களும் எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கும்.

மழை பெய்யும் போதெல்லாம் நாங்கள் கண்காணித்து கொண்டுதான் இருக்கிறோம். அமைச்சர்கள் மட்டும் ஆய்வு செய்யவில்லை. முதலமைச்சரின் நேரடி பார்வையில் இருப்பதால் பெரிய சேதங்கள் ஏற்படாது.

பாதுகாப்பு மையங்கள் என்ற பெயரில் 131 இடங்கள் உள்ளன. மழை, வெள்ளம் வந்து வீடுகள், குடிசைகள் இடியும் சமயத்தில் பள்ளிகள், திருமண மண்டபங்களை அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள், உள்ளாட்சி நிர்வாகிகள் தங்கள் வசம் கொண்டு வந்து மக்களை தங்க வைக்க ஏற்பாடு செய்வார்கள்.

மக்களுக்கு நல்ல தரமான உணவு, அத்தியாவசியப் பொருட்களை கொடுக்கவேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தி இருக்கிறார். வெள்ளம் வரும் சமயங்களிலும், அணைகளில் இருந்து நீர் திறந்துவிடும்போதும் மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுப்போம்.

பேரிடர் ஏற்பட்டால் மீட்பு பணிகளில் ஈடுபட பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 2048 வீரர்கள் தயாராக உள்ளனர்.

சென்னை மாநகராட்சி, மின்சாரத்துறையினர் என மற்ற துறையினரிடம் ஆலோசனை மேற்கொண்டு ஒருங்கிணைந்து பணிகள் மேற்கொள்ள முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை தொடர்பு கொள்கிறோம்

மழை பெய்தால் அதை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.

இந்திய வானிலை மையத்தோடு தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். 3 மணி நேரத்துக்கு ஒருமுறை தகவல்களை கேட்டுப் பெற்று வருகிறோம்.  

எந்த முதலமைச்சரும் இதுவரை வடிகால் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்ததில்லை.

ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரே நேரடியாக சென்று ஆய்வு செய்வதுடன் சம்மந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசித்து வருகிறார்.

மழை பெய்தால் புயல் வரும். எனவே அதையும் எதிர்நோக்கத் தயார்நிலையில் இருக்கிறோம். மின்கம்பங்கள் சாய்ந்தால் அதை உடனே சரிசெய்யும் வகையில் ஏற்பாடு செய்திருக்கிறோம்.

கடந்த 26 ஆம் தேதியே மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.

எல்லா மாவட்டத்துக்கும் ஒரு ஐஏஎஸ் அதிகாரியை கண்காணிப்பு அதிகாரியாக நியமித்து இருக்கிறோம்.

வடகிழக்கு பருவமழை 35 முதல் 75 சதவீதம் கூடுதலாக பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்மேற்கு பருவமழையை விட வடகிழக்கு பருவமழையை சிறப்பாக எதிர்கொள்வோம்” என்றார்.

கலை.ரா

கட்சியில் பொறுப்பும் இல்லை , அந்தஸ்தும் இல்லை: வருத்தத்தில் அமைச்சர் பிடிஆர்

கொடூர விபத்து: ஊட்டிக்கு சுற்றுலா வந்த மாணவர்கள் உயிரிழப்பு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *