திருச்சி புதிய விமான முனையத்தை திறந்து வைக்க இன்று (ஜனவரி 2) வருகை தந்துள்ள பிரதமர் மோடியை, ஆளுநர் ரவி மற்றும் முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர்.
ரூ.1200 மதிப்பீட்டில் திருச்சி புதிய விமான முனையம், கல்பாக்கத்தில் ரூ.400 கோடி மதிப்பிலான விரைவு எரிபொருள் மறுசுழற்சி உலை உட்பட ரூ.19,850 கோடி மதிப்பீட்டில் பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைக்கவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகிறார் என்று அறிவிக்கப்பட்டிந்தது.
அதன்படி திருச்சி விமான நிலையத்திற்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் வந்த பிரதமர் மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு உள்ளிட்டோர் நேரில் வரவேற்றனர்.
பின்னர் விமான நிலையத்தில் இருந்து கார் மூலமாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு செல்லும் வழியில் கையசைத்தபடி சென்ற பிரதமருக்கு பாஜக தொண்டர்கள் இருபுறமும் நின்று மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பாஜகவுடன் கூட்டணியை அதிமுக முறித்துக்கொண்ட பிறகு, முதன்முறையாக தமிழகம் வரும் மோடியை வரவேற்க அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
காவல் அதிகாரிக்கு பதவி உயர்வு… வரலாற்றுப்பழியில் திமுக : சீமான் எச்சரிக்கை!
ரூ.19,850 கோடி : தமிழகம் வரும் பிரதமர் மோடியின் பயணத் திட்டம்!