தமிழக அமைச்சரவை மாற்றத்தை தொடர்ந்து மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் இன்று (மே 13) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
முதல்வர் ஸ்டாலினின் முதன்மை செயலாளராக இருந்த உதயச்சந்திரன் ஐஏஎஸ் நிதித்துறை செயலாளராகவும்…நிதித்துறை செயலாளராக இருந்த முருகானந்தம் ஐஏஎஸ் முதல்வரின் முதன்மை செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக ஊரக வளர்ச்சி துறை செயலாளராக இருந்த அமுதா ஐ.ஏ.எஸ் உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி போக்குவரத்து துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ககன்தீப் சிங் பேடி சுகாதாரத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு செயலாளராக இருந்த ஜெ.ராதாகிருஷ்ணன் சென்னை மாநகராட்சி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் மனித வள மேம்பாட்டு துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சுற்றுலா, அறநிலையத்துறை செயலாளராக இருந்த சந்திரமோகன் ஐ.ஏ.எஸ் பொதுப்பணித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சுகாதாரத்துறை செயலாளராக இருந்த செந்தில் குமார் ஊரக வளர்ச்சி துறை செயலாளராக நியமனம்.
போக்குவரத்து துறை செயலாளராக இருந்த கே.கோபால் லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையராக மாற்றம்.
பொதுப்பணித்துறை செயலாளர் மணிவாசன் சுற்றுலா, அறநிலையத்துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு செயலாளராக ஜெகன்நாதன் நியமனம்.
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை ஆணையராக மைதிலி ராஜேந்திரன் நியமனம்.
பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை இயக்குநராக கணேஷ் நியமனம்.
செல்வம்
முதல்வரின் முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் மாற்றம்!
காங்கிரஸ் வெற்றி: மோடி வாழ்த்து!