அதிமுக வட்டார கட்சியாக மாறிவிட்டது: டிடிவி தினகரன்

அரசியல் முக்கிய செய்திகள்

அதிமுகவில் ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்களே அனைத்து முடிவுகளையும் எடுக்கும் நிலை தற்போது உள்ளது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி தொடங்கி 5 ஆண்டு முடிவடைந்து 6 ஆம் ஆண்டில் இன்று (மார்ச் 15 ) அடியெடுத்து வைக்கிறது.

இந்நிலையில், சென்னையில் உள்ள அமமுக அலுவலகத்தில் கழக கொடியை ஏற்றினார் டிடிவி தினகரன்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “எவ்வளவு முயற்சி செய்தும் அதிமுகவால் இடைத்தேர்தலில் வெல்ல முடியவில்லை. அதிமுக தொடர்ந்து பலவீனமடைந்து வருகிறது. இன்னும் பலவீனப்பட்ட பிறகே திருந்துவார்கள்.

சுய காரணங்களுக்காக அமமுகவினர் வேறு கட்சிக்கு செல்வதை தடுக்க முடியாது. ஆனால் அவர்கள் சென்ற உடனே அந்த பொறுப்பிற்கு அவர்களை விட திறமையானவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

உண்மையான தொண்டர்கள் எங்களுடன் இருக்கிறார்கள்” என்று டிடிவி தினகரன் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் , எடப்பாடி பழனிசாமி பணபலத்துடன் களத்தில் இறங்கியுள்ளார். எடப்பாடி பழனிசாமியின் தலைமையால், அதிமுக ஒரு வட்டாரக் கட்சியாக மாறிவிட்டது என விமர்சனம் செய்தார்.

அதிமுகவில் ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்களே அனைத்து முடிவுகளையும் எடுக்கும் நிலை தற்போது உள்ளது. இரட்டை இலை சின்னமும், அதிமுகவும் துரோகிகள் கையில் சிக்கி கொண்டுள்ளது. வருங்காலத்தில் ஜெயலலிதாவின் லட்சியங்களை அடுத்த சந்ததியினருக்கு கொண்டு சேர்க்கப்போவது அமமுக தான் என்றார் டிடிவி தினகரன்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

“முதல்வரை சந்தித்ததில் மகிழ்ச்சி”: முதுமலை தம்பதி

எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை மாநிலங்களவை ஒத்திவைப்பு!

+1
0
+1
4
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *