ஈரோடு இடைத்தேர்தல் வேட்பாளரை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று (ஜனவரி 27) அறிவித்தார்.
ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தி வந்த டிடிவி தினகரன், ஜனவரி 27ஆம் தேதி இதுகுறித்து அறிவிக்கப்படும். நானே கூட போட்டியிடலாம் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு மாவட்ட அமமுக செயலாளர் சிவபிரசாந்த்தை வேட்பாளராக அறிவித்துள்ளார் டிடிவி தினகரன்.
இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சிவபிரசாந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 29 தான். அவரது குடும்பமே அமமுகவுக்காக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அவர் குக்கர் சின்னத்தில் போட்டியிடுவார். திமுகவுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தேர்தல் அமையும். வரும் ஞாயிறு முதல் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறோம்” என்றார்.
பிரியா
2 லட்சம் பேருக்கு பிரசாதம், ஹெலிகாப்டரில் பூ மழை: பழனி கும்பாபிஷேகம் கோலாகலம்!
‘பிகினிங்’ சினிமாவில் புது முயற்சி : திருப்பதி பிரதர்ஸ்