அமமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் கழக பொதுச்செயலாளர், தலைவர், துணை தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
14ஆவது தீர்மானத்தில், “கழக சட்ட விதி எண்கள் 24, 25 மற்றும் 26 ஆகியவற்றின்படி நான்கு ஆண்டுகள் பதவிக்காலம் கொண்ட கழகப் பொதுச் செயலாளர் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பொறுப்புகளுக்கான பதவி காலம் வருகிற 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தோடு நிறைவடைகிறது.
இப்பதவிகளுக்கான தேர்தல் நடைபெறும் போது துணைத் தலைவர் அவர்களால் தற்போது கூடுதலாக சேர்த்து கவனிக்கப்பட்டு வரும் தலைவர் பதவிக்கான தேர்தலையும் நடத்துவது என பொதுக்குழு ஏகமனதாக தீர்மானிக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானத்தை அமைப்புச் செயலாளர்கள் கோபால் மற்றும் கதிர்காமு உள்ளிட்டோர் முன்மொழிய அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் வழிமொழிந்தனர்
முந்தைய காலங்களில் செய்தியாளார்கள் சந்திப்பின் போது, சசிகலாவிற்காக அந்த பதவி வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் எப்போது வந்தாலும் பதவி ஏற்றுக்கொள்ளலாம் என்றும் அமமுக பொதுச் செயலாளர் தினகரன் கூறி வந்த நிலையில் அந்த பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரியார் சிலை குறித்து அவதூறு : ஸ்டண்ட் மாஸ்டர் கனல்கண்ணன் கைது!