அம்மா உணவகம், மேகதாது, சொத்து வரி உயர்வு : அமமுக பொதுக்குழு தீர்மானங்கள் என்னென்ன?
அமமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் இன்று (ஆகஸ்ட் 15) நடைபெற்றது.
பொதுக்குழுவில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பொதுச்செயலாளர், தலைவர், துணை தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அமமுக செயற்குழு – பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
- தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சி தலைவி அம்மா ஆகிய பெருந்தலைவர்களின் வழியில் செயல்படும் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தலைமையில் உண்மைத் தொண்டர்களாக தொடர்ந்து பயணிக்க உறுதி.
- ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறச் செய்து கழகத்தை எதிர்வரும் களத்திற்கு, ஆயத்தமாக்கிவரும் பொதுச்செயலாளருக்கு நன்றி.
- ஏழை எளிய மக்களுக்காக புரட்சி தலைவி அம்மா தொடங்கிய அம்மா உணவங்கள் உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்களை முடக்கும் திமுக அரசுக்கு கண்டனம்.
- காவிரியின் குறுக்கே மேகதாது அணைக்கட்டும் கர்நாடக அரசின் முயற்சிகளைத் தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு வலியுறுத்துதல்.
- மக்களுக்கு தாங்க முடியாத சுமையாக மாறிவரும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையைக் கட்டுக்குள் வைக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தல்.
- பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்த முன்னுதாரணத்தின் அடிப்படையில் சிறையில் வாடும் எஞ்சிய ஆறு தமிழர்களையும் விடுவிக்க கோரிக்கை.
- திமுக அரசின் 150 சதவிகித சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு ஆகிய மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு கடும் கண்டணம்.
- திமுக ஆட்சியின் அவலங்களை எதிர்த்து பொதுக்கூட்டங்கள், தெருமுனைக்கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ச்சியாக நடத்த முடிவு.
- உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கியவர்களுக்கும், கடும் போட்டிக்கிடையே வெற்றி பெற்றவர்களுக்கும், அதற்காக உழைத்தவர்களுக்கும் பாராட்டுக்கள்.
- காவிரி டெல்டா பகுதிகளில் எக்காரணம் கொண்டும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், உள்ளிட்ட விவசாயத்தைப் பாதிக்கும் எரிவாயு திட்டங்களை செயல்படுத்தக்கூடாது.
- கழக நிர்வாக வசதிக்காக, 93 மாவட்டக்கழகங்கள் என அமைக்கப்பட்டிருந்ததை 94 கழக மாவட்டங்களாக பொதுச்செயலாளர் அவர்கள் விரிவுபடுத்தியதை அங்கீகரித்தல்
- புதுச்சேரி யூனியன் பிரேதச கழக அமைப்பில் மேற்கொள்ளப்பட்ட நிர்வாக மாற்றத்தினை அங்கீகரித்தல்
- தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட மாநகரங்களில் கழக நிர்வாக அமைப்புகள் மாற்றி அமைக்கப்பட்டதை அங்கீகரித்தல்
- கழக பொதுச்செயலாளர், தலைவர், துணை தலைவர் உள்ளிட்ட பதவிக்கான தேர்தல் தொடர்பான தீர்மானம்.
உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செல்வம்
வங்கிக் கொள்ளை : முக்கிய குற்றவாளி சரண்!