பிரதமர் தேர்தலில் அணிலாக இருப்போம்: டிடிவி தினகரன் பேட்டி!

அரசியல்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் கூட்டணியில் அமமுக இருக்கும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அந்நிய செலாவணி மோசடி தொடர்பான வழக்கில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரனை திவாலானவர் என அறிவிப்பது தொடர்பான நோட்டீசை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (அக்டோபர் 21) தீர்ப்பு வழங்கியது. அதோடு, சட்டப்படி புதிதாக நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கவும் அமலாக்கத் துறைக்கு அனுமதியளித்து உத்தரவிட்டது.

இந்தச்சூழலில் இன்று (அக்டோபர் 21) ஒருங்கிணைந்த கோவை மாவட்ட செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்தார் டிடிவி தினகரன்.

அப்போது பேசிய அவர், “அமலாக்கத் துறை நோட்டீஸை உயர் நீதிமன்றம் ரத்து செய்யும் என்று முன்பே தெரியும். சரியான தீர்ப்புதான் வழங்கியிருக்கிறது” என்றார்.

Image

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

தொடர்ந்து அவர், “பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் கூட்டணியில் அமமுக இருக்கும். கூட்டணியில் இருக்க முடியாத சூழ்நிலை வந்தால் தனித்து நிற்கவும் தயாராக இருக்கிறோம். நாடாளுமன்றத் தேர்தலில் அமமுக சிறப்பாகச் செயல்படும்.
மத்தியில் ஆளுகின்ற பிரதமரைத் தேர்ந்தெடுப்பதில் அணிலைப் போன்று அமமுக செயல்படும். பாஜக அல்லது காங்கிரஸ் கட்சிகள் தான் பிரதமரைக் கொடுக்கக் கூடிய தேசிய கட்சிகள். அந்த கூட்டணியிலும் இருக்கலாம் தனித்தும் போட்டியிடலாம்” என்றார்.

எடப்பாடி பழனிசாமி பசும்பொன் செல்வது குறித்துப் பேசிய அவர், “வட தமிழக மக்களை, வன்னிய மக்களை ஏமாற்றுவதற்காகத் தேர்தல் சமயத்தில் 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி. இதனால் 109 சமுதாய மக்கள், ஒரு சமுதாயத்துக்கு மட்டும் உள் ஒதுக்கீடு வழங்குவது மற்றவர்களை பாதிக்கும் என்ற அச்சத்தில் அவர்கள் எல்லாம் எடப்பாடிக்கு எதிராக மாறினார்கள்.

இன்றைக்கு வட தமிழகத்திலும் இவரது ஏமாற்று வேலை வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. எடப்பாடி தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பொலிடிக்கல் ப்ளெண்டர் செய்துவிட்டார்.

இதனால் பயந்துகொண்டுதான் 2 ஆண்டுகளாகத் தேவர் ஜெயந்திக்கு வரவில்லை. இப்போது வருகிறார் என்றால் நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. சங்கரன்கோவிலில் நடந்த கூட்டத்தில் வெறும் சேர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்” என்று விமர்சித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

அமர் பிரசாத் ரெட்டி கைது – நவம்பர் 3 வரை காவல்!

சென்னையில் பாகிஸ்தான் வீரர்கள்: தோல்வியில் இருந்து மீள்வார்களா?

எய்ம்ஸுக்கு செங்கல்… நீட்டுக்கு முட்டை : மத்திய அரசை விமர்சித்த உதயநிதி

+1
0
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *