அமமுகவின் 4-வது பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் இன்று (அக்டோபர் 7) காலை தஞ்சாவூர் மஹாராஜா மஹாலில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் அமமுகவின் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இக்கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அவை பின் வருமாறு,
- தெளிவான பார்வை மற்றும் தொலைநோக்கு சிந்தனையால் உலக நாடுகளின் மத்தியில் நம் நாட்டிற்கு பெருமை தேடித் தந்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான நல்லாட்சியில், வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை விரைவிலேயே அடைய முழுமையான ஆதரவு.
- தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காக உழைத்திட்ட நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
- அமமுகவின் விதி 9 (பிரிவு 1)-ன் படி அமைக்கப்பெற்ற 94 மாவட்டங்கள் நிர்வாக வசதிக்காக 91 மாவட்டங்களாக பொதுச்செயலாளரால் மறுசீரமைக்கப்பட்டதை இப்பொதுக்குழு ஒருமனதாக அங்கீகரிக்கிறது.
- தமிழகத்தையும், தமிழக மக்களையும் இருளில் மூழ்கடித்துவிட்டு தங்களது குடும்பத்திற்கு மட்டும் வெளிச்சம் பாய்ச்சிக் கொண்டிருக்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனம்.
- நிர்வாகத் திறமையின்மைக்கும், மோசமான ஆட்சிக்கும் உதாரணமாக திகழும் திமுக அரசுக்கு கடும் கண்டனம்.
- நாட்டின் எதிர்கால தலைமுறையான இளைய சமுதாயத்தின் மீது துளியளவும் அக்கறையின்றி செயல்படும் திமுக அரசுக்கு கடும் கண்டனம்.
- திமுக அரசு உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பை விரைந்து நடத்திட வேண்டும்.
- தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதற்கு நிரந்தர தீர்வான கச்சத்தீவை மீட்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்த வேண்டும்.
- மக்களின் அமைதியான வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்க முடியாத திமுக அரசுக்கு கடும் கண்டனம்.
- தமிழகத்தில் மக்கள் விரும்பாத திட்டங்களை முன்னெடுப்பதும், எதிர்ப்புகள் கிளம்பியபின் கிடப்பில் போடுவதையுமே வாடிக்கையாக வைத்திருக்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனம்.
- கர்நாடகம் மழைக்காலங்களில் மட்டும் திறந்துவிடும் காவிரியின் உபரி நீர் வீணாக கடலில் கலப்பதைத் தடுக்கும் வகையில், தமிழக விவசாயிகள் முன்வைக்கும் கோரிக்கையான ராசிமணல் பகுதியில் அணைகட்டி காவிரி நீரைப் பயன்படுத்திக்கொள்ள உரிய முயற்சிகளை திமுக அரசு காலம் தாழ்த்தாமல் செய்ய வேண்டும்.
- ஜெயலலிதா முன்னெடுத்த மக்கள் நலக்கொள்கைகளை நிலை நாட்டிடவும், தீயசக்தி கூட்டத்தை வீழ்த்திடவும் அமமுக அங்கம் பெற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி மகத்தான வெற்றியினைப் பெற்று தமிழகத்தில் மீண்டும் அம்மா அவர்களின் உண்மையான ஆட்சியை அமைத்திட அயராது உழைப்போம்” என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பாத்திமா பீவி, வேளான் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், மூத்த அரசியல்வாதி ஆர்.எம்.வீரப்பன், மார்க்சிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, சங்கரய்யா போன்றவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
“மெரினா உயிரிழப்புகள் மிகுந்த வேதனை அளிக்கிறது”: கனிமொழி
5 பேர் உயிரிழப்பு – உயர்மட்ட விசாரணை வேண்டும் : திருமாவளவன்
+1
+1
1
+1
+1
1
+1
1
+1
+1