திரிபுராவில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால், கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாக்குறுதி அளித்துள்ளார்.
திரிபுராவில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 16 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சேபாஹிஜாலா மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் ஒன்றில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், “காங்கிரஸுடன் கூட்டணி வைத்ததன் மூலம், தேர்தலில் தோற்கப் போகிறோம் என்பதை சிபிஎம் நிரூபித்துள்ளது. பாஜகவை தனித்து எதிர்கொள்ள முடியாத காங்கிரஸ் வெட்கப்பட வேண்டும்.
காங்கிரஸும் சிபிஐ(எம்)ம் திரிபுராவிற்கு எதுவும் செய்யவில்லை. பாஜக ஆட்சியில் திரிபுராவில் வளர்ச்சி ஏற்பட்டது. அனைவரின் வளர்ச்சிக்காகவும் நாங்கள் உழைத்தோம்.
காங்கிரஸும், சிபிஎம்மும் ஆதிவாசிகளுக்கு எதுவும் செய்யவில்லை, இப்போது ஆதிவாசிகளின் வாக்குகளைப் பெற அவர்கள் ஒரு ஆதிவாசி முதல்வர் முகத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர்” என்றார்.
அதனைத்தொடர்ந்து ”திரிபுராவில் பாஜக ஆட்சிக்கு வந்தால், கல்லூரி செல்லும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இலவசமாக ஸ்கூட்டி கொடுப்போம்” என்று தேர்தல் வாக்குறுதியாக அறிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
தென்னாப்பிரிக்கா டி20 லீக் : பைனலில் பந்தாடிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி சாம்பியன்!
இடைத்தேர்தலில் அண்ணாமலையுடன் சேர்ந்து பிரச்சாரமா? : எடப்பாடி பதில்!