அதானி விவகாரத்தில் பாஜக அரசு மறைக்கவோ பயப்படவோ எதுவும் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அமித்ஷா அளித்துள்ள பேட்டியில், திரிபுரா சட்டமன்ற தேர்தல், அதானி விவகாரம், பிஎஃப்ஐ அமைப்பு தடை, நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்டவை குறித்து பேசியுள்ளார்.
நேர்காணலில் அவர் பேசும்போது, “திரிபுரா மாநிலத்தை அடுத்த ஐந்தாண்டுகளில் வளமான பாதைக்கு பாரதிய ஜனதா கட்சி கொண்டு செல்லும்.
வாக்கு எண்ணிக்கை நாளில் மதியம் 12 மணிக்கு முன்னதாகவே பாஜக பெரும்பான்மையை தாண்டியிருக்கும்.
உச்சநீதிமன்றத்தில் அதானி குழுமத்தின் ஹிண்டன்பெர்க் அறிக்கை குறித்த விசாரணை நடைபெற்று வருவதால் இதில் நான் கருத்து கூறுவது சரியாக இருக்காது. ஆனால் இந்த விவகாரத்தில் பாஜக அரசு மறைப்பதற்கோ பயப்படுவதற்கோ எதுவுமில்லை.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை வெற்றிகரமாக தடை செய்துள்ளோம். இது நாட்டில் மதவெறியை ஊக்குவிக்கும் ஒரு அமைப்பாகும். அவர்களின் நடவடிக்கைகள் நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராக இருந்ததாக கிடைத்த சான்றுகள் தெரிவிக்கின்றன.
நாங்கள் வாக்கு வங்கி அரசியலை கடந்து பிஎஃப்ஐ அமைப்பை தடை செய்துள்ளோம்.
கர்நாடகாவில் பாஜக முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். கடந்த 2 மாதங்களில், நான் 5 முறை கர்நாடகா மாநிலத்திற்கு சென்றுள்ளேன்.
பிரதமர் மோடியின் புகழை அந்த மாநில மக்களிடமக்களிடம் என்னால் உணர முடிந்தது. கர்நாடகாவில் பாஜகவுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும்.
2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜவுக்கு எந்த போட்டியுமில்லை. பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்களின் முழு ஆதரவும் உள்ளது.
செல்வம்
பிரிட்டன் ராணிக்கு கொரோனா தொற்று உறுதி!
வரி ஏய்ப்பு புகார்: சென்னையில் ஐடி ரெய்டு!