தனது திரை கதாபாத்திரங்கள் மூலம் மக்களிடையே தேசபக்தியைத் தூண்டியவர் விஜயகாந்த் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா புகழாரம் சூட்டியுள்ளார்.
மறைந்த விஜயகாந்த்தின் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமையகத்துக்குப் பொதுமக்களின் அஞ்சலிக்காகக் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
அவரது மறைவுக்கு நேரிலும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், “தேமுதிக தலைவரும், தமிழ் திரையுலகில் மூத்த நடிகருமான விஜயகாந்தின் மறைவு குறித்து அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். கேப்டன் என்று அன்புடன் அழைக்கப்படும் விஜயகாந்த் அவர்கள் தனது திரை மற்றும் ஆஃப்ஸ்கிரீன் பாத்திரங்கள் மூலம் மக்களிடையே தேசபக்தியை தூண்டினார். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் ஷாந்தி ஷாந்தி” என்று குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
விஜயகாந்த்துக்கு அஞ்சலி…ஷுட்டிங் ரத்து- தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு!