அமித்ஷா அழைப்பின் பேரில் முன்னாள் ஆளுநரும் முன்னாள் பாஜக மாநில தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் இன்று (ஜூன் 27) டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார்.
சமீபத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் மேடையிலேயே அமித்ஷா டாக்டர் தமிழிசையை அழைத்து எச்சரிக்கை விடுத்ததாக வீடியோ காட்சிகள் வைரலாகின. இதையடுத்து அமித்ஷா தனக்கு அறிவுரை தான் வழங்கியதாக தமிழிசை தெரிவித்தார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் தமிழிசையை அவரது இல்லத்துக்கு சென்று சந்தித்து வந்தார்.
இதற்கு இடையில் மின்னம்பலத்தில் நாம் ஏற்கனவே வெளியிட்டதைப் போல… தமிழ்நாடு பாஜகவில் நடக்கும் உட்கட்சி விவகாரங்கள் குறித்தும் தனது செயல்பாடுகள் குறித்தும் அமித்ஷாவுக்கும் மோடிக்கும் தமிழிசை விரிவான மின்னஞ்சல் அனுப்பி இருந்தார்.
அதன் அடிப்படையில் தமிழிசையை அமித்ஷா டெல்லிக்கு அழைத்து பேசியதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி செல்வதற்கு முன் தமிழிசை தமிழகத்தின் பாஜக மூத்த தலைவர்களிடம் உரையாடி சென்றதாகவும் தெரிகிறது.
எனவே அமித்ஷா தமிழிசை சந்திப்பை அடுத்து தமிழக பாஜகவில் மேலும் பரபரப்புகள் அரங்கேறலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஜெயலலிதா மரணத்தில் கசந்த சிபிஐ இன்றைக்கு இனிக்கிறதா? – கே.என்.நேரு கேள்வி!
சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.100 கோடி: பேரவையில் உதயநிதி அறிவிப்பு!
அண்ணாமலைஜி வெளிநாடு செல்லவிருப்பதால், நம்ம தமிழிசையக்கா தலைவியா ஆயிருவாங்க…?